(புதியவன்)
அபுதாபியின் முதல் இந்து கோயில் நாளை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
27 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் பாரம்பரிய முறைப்படி இக்கோவிலுக்கான கற்களை செதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்க தலைமை அமைச்சர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு இராச்சியம் செல்கிறார்.
இரு தரப்புக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் முகமாக இந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் தூதர் அப்துல்நாசிர் அல்ஷாலி, குறிப்பிட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.