புதியவன்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் முதன்முதலில் நுழையும் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ரோபின் மின்ஸ் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் ஏலமானது நேற்று புதன்கிழமை டுபாயில் இடம்பெற்றது.
குறித்த ஏலத்தில் 21 வயதான ரோபின் மின்ஸ் 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவியுள்ளது. இதில் இறுதியாக ரோபின் மின்ஸ் 3.6 கோடி இந்திய ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.