இந்தியர்களின் முக்கிய விபரங்கள் திருடப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விடயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் 14 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பயங்கரவாத தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.தடைசெய்யப்பட்ட செயல்களில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi மற்றும் Threema ஆகியவை அடங்கும்.
.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.