(ஆதவன்)
தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்றுமுன் தினம் கையளிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் இந்த வீடுகளைத் திறந்து வைத்தார்.
இந்திய மதிப்பில் சுமார் 3.56 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாமிலுள்ளவர்களுக்காக புதுக்கோட்டை தேக்காட்டூர் பகுதியில் 58 வீடுகளும் 2.03 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் எட்டயபுரம் - குளத்துள்வாய்பட்டியில் 40 வீடுகளும் மேலும் சிவகாசி ஆனைக்குட்டத்திலும் வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.