(புதியவன்)
ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த உந்துருளி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஓட்டுனரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஓட்டுனரான மாணவர் உயிரிழந்துள்ளார்.
கலடன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.