(யோகி)
சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை (இடியன்)மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது
தர்மபுரம் காவல் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகள் மற்றும் மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்கு குழாய்கள் 03 கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஈயக்குண்டுகள் (12 யானை வெடி) (3 வெடிமருந்து) என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக (14.02.2024) இன்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் காவல்துறை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் (15.02.2024) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர காவல் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.