கிராஞ்சி - வேரவில் பிரதான வீதியில் வேரவில் மருத்துவமனை முன்பாக நேற்றிரவு 7.30 மணி யளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் வலைப்பாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய சிதம்பரநாதன் வர்மன்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை முன்பாக பயணித்த சந்திரன் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்மன்குமார் மோதியதாகவும் விபத்தில் படுகாயமடைந்த அவர் முழங்காவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது உயிரிழந் ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.