இன்று மன்னாரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் - பெரிய கடை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் சாப்பாடு வாங்குவதற்காக, தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மத்திய கோட்டினை தாண்டி முதியவரது பக்கத்துக்கு வந்து அவரது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.