செல்வன்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்காலில் நேற்று வியாழக்கிழமை(07) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் சில்லுக்கு காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்து இடம்பெற்றிருந்தது.
எனினும் காரில் பயணித்த எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.