அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க 4 நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைந்ததாக அமைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழ மருத்துவபீட மாணவர்களுக்கான விடுதியை திறந்து வைக்கவுள்ளார். அன்றைய தினம் காணி உரித்து வழங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
25ஆம் திகதி கிளிநொச்சிக்கும், 26ஆம் திகதி முல்லைத்தீவுக்கும், 27ஆம் திகதி வவுனியாவுக்கும் அவர் செல்லவுள்ளார்.
இந்த ஆண்டு அரச தலைவர் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க 4 நாள் பயணமாக வடக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.