(புதியவன்)
நுவரெலியா மாவட்டத்தின் லவர்சீலிப்பிலுள்ள காட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்துள்ளது. உயிரிழந்தவரின் அங்க அடையாளங்களைக் கொண்டு 50 தொடக்கம் 60 வயதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.