சாட்சிக்காரன் காலில விழுகிறதை விடவும் சண்டைக்காரன்ர காலில விழுந்தாத் தான் வழக்கை முடிக்கலாம் எண்டு சொல்லுவினம். இப்ப அப்பிடியெல்லாம் இல்லை. சண்டைக்காரன் காலில விழுகிறதை விட சாட்சிக்காரனை வெருட்டினாலே வழக்கை தள்ளுபடி செய்யலாமெண்டு சிலர் நினைக்கினம். நாலைஞ்சு நாளைக்கு முதல் புன்னாலைக்கட்டு வனில பொலிஸ்காரர் துரத்திக் கொண்டுபோய், காலால உதைஞ்சதில ஒருத்தர் கரண்ட் போஸ்ட் டோட மோதுப்பட்டு செத்தவரெல்லோ. அப்பிடி அந்தாளை பொலிஸ் உதையேக்க நேரில கண்ட சனம் பொலிஸை அடிக்கிற அளவுக்குப் போட்டுது. பிறகு ஒருமாதிரி அவை தப்பி வந்திட்டினம்.
இப்ப என்னெண்டால், சனம் தங்களுக்கு எதிராச்சாட்சி சொன்னால் நிலைமை சிக்கலாயிடும், பொலிஸில சனத்துக்கு இருக்கிற பயம் போடும் எண்டு நினைச்சு. ஒருவேலையில இறங்கியிருக்கினமாம். பொலிஸ் அந்த ஆளை உதைச்சதை நேரில கண்டவை எல்லாருக்கும் போனில 'நீங்கள் சாட்சி சொல்லப் போகக் கூடாது. போனால் பிறகு பொலிஸ் ஆரெண்டு காட்டுவம். அண்டையான் சம்பவத்தை வீடியோ எடுத்து ரிக்ரொக்கில போட்ட ஆக்களுக்கும் வழக்குப்போடப்போறம்' எண்டமாதிரி கடும் மிரட்டலாம். ஒருவேளை பொலிஸ்காரர் இப்பிடிச் சொன்னபிறகும் அவைக்கு எதிராச்சாட்சி சொன்னால். தங்களுக்கும் குடும்பத்துக்கும் ஏதும் சிக்கல் வந்திடுமோ எண்டு நினைச்சு, சாட்சி சொல்ல வாறமெண் டவை இப்ப பின்னடிக் கினமாம்.
ஆனால் பொலிஸ் ஸ்ரேசனில் நேரடியா இதுபற்றிக் கேக்க 'அப்பிடி நாங்கள் ஒருத்தருக்கும் கோல் எடுக்கேலை. இதெல்லாம் கட்டுக்கதை' எண்டு சொல்லுகினமாம். அப்ப பொலிஸ்காரர் இப்பிடி வெருட்டேலை எண்டால். ஆர் அந்த வெருட்டல் கோல் எடுத்தவை எண்டதைப் பொலிஸ்காரர் கண்டுபிடிக்கவேணும். அப்பிடிக் கண்டுபிடிச்சால் பொலிஸ்காரர் மேல உள்ள கெட்டபேர் கொஞ்சம் இல்லாமல் போகும். அதோட சாட்சிக்காரரும் துணிஞ்சு நீதிமன்றத்துக்கு வருவினம். பொலிஸ் ஸ்ரேசனில சொல்றமாதிரி, வேற ஆரோதான் இப்பிடி பொலிஸின்ர பேரைச் சொல்லி வெருட்டுகினம் எண்டால், இப்பிடி வேற விசயங்களுக்கும் அவை பொலிஸின்ர பேரைப் பாவிச்சு செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்யேக்கையும் பொலிஸ்காரர் கைகட்டி, வாய்பொத்தி நிக்கப்போயினமோ?
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம்தான். பொலிஸ்காரர் பிழை செய்தாக்கூட அதை பிழை எண்டு சொல்லி. தண்டனை வாங்கிக் குடுத்தாத்தான் சனம் பொலிஸ்காரரை நம்பும். குற்றங்கள் குறையும். அதைவிட்டிட்டு தங்கட ஆக்கள் செய்த பிழையளை இப்பிடி சாட்சியளை வெருட்டி, மறைக்க வெளிக்கிட்டால், காக்கிச்சட்டைக்காரரைவிடவும் கள்ளர் பரவாயில்லை எண்டுதானே சனங்கள் நினைக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.