(புதியவன்)
குளியாப்பிட்டிய மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்லவில் இன்று மிகப் பெரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பே கல்முருவயை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கடும் மழை காரணமாக வீதியோரத்திலிருந்த மிகப் பெரிய மரமொன்றின் கீழ் நின்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென அந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.