(ஆதவன்)
யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநகரசபையின் ஆட்சிக்காலத்தில். யாழ்ப்பாணம் ஆரியகுளதில் எந்தவொரு அலங்காரத்தையும் முன்னெடுக்கும் போதும் அது தொடர்பில் மாநகரசபையிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சிக் காலத்தின்போது ஆரியகுளத்தில் மதம் சார்ந்த எந்தவொரு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மாநகரசபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இராணுவத்தால் அங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இராணுவத்தினர் ஆரியகுளத்தை துப்புரவு செய்து தரும்படியே கேட்டனர். ஆனால், அங்கு அலங்காரம் மேற்கொள்ள அனுமதி பெறவில்லை - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.