(புதியவன்)
வரலாற்றுப் சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று அதிகாலை இடம்பெற்றது.
கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இன்று அதிகாலை சுப முகூர்த்தத்தில் பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இன்று அதிகாலை பக்தி பூர்வமாக பாரம்பரிய கலாசார மரபு முறைப்படி கன்னிக்கால் நடப்பட்டது.
கதிர்காமம் பெரிய ஆலயத்தின் வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 21ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று ஜூலை 22ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.