(புதியவன்)
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழும் மற்றும் மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதால் வீதியில் மிக அவதானமாக பயணிக்குமாறு ஓட்டுநர்களுக்கு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா – ஹங்குராங்கெத்தை ஹோப் தோட்டத்தில் 13 குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் பலத்த காற்று மற்றும் மண்சரிவால் இந்த தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆலயம் ஒன்றிலும் உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.