(புதியவன்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவ பீடத்தின் 46 வருட வரலாற்றில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியே அரசதலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை யாழ் போதனா மருத்துவமனையுடன் இணைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டடத் தொகுதி அரசதலைவரால் இன்று திறந்து வைக்கப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.