ஆக்குகிறவள் சலித்தால் அருப்புப் பாழ்: குத்துகிறவள் சலித்தால் குந்தாணி பாழ் எண்டொரு பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டியளோ தெரியாது. எந்த வேலையையும் சலிக்காமல், சிடுசிடுக்காமல். மனம் வைச்சு செய்தால்தான் அது சரியா வரும். ஆனால் இஞ்ச அரசாங்க உத்தியோகத்தில இருக்கிற கனபேர் கதிரையைத் தேய்ச்சு சூடாக்கிறதிலதான் குறியா இருக்கினமே தவிர சனத்தைப் பற்றிக் கவலைப்படுறேலை. இந்தக் கிழமையில மூண்டுநாள் தான் உந்த ஒப்பீஸ் எல்லாம் இயங்கும். இண்டைக்கு வியாழக்கிழமையில இருந்து ஞாயிறுமட்டும் பெரும் லீவு. அதால அவசர வேலையுள்ள சனங்கள் இந்த மூண்டு நாளும் ஆத்தலைஞ்ச மாதிரி. தங்கட அலுவலை முடிக்க ஓடித்திரிஞ்சதுகள். நேற்றுத்தான் இந்தக் கிழமையின்ர கடைசி ஒப்பீஸ் நாள். புதன் போனால் கிடையாது பொழுது பட்டால் கிடைக்காது எண்ட நிலைமை. இந்த ரென்சனோட வலிகாமத்தில பஸ்ஸ்ரான்டோட இருக்கிற ஒரு ஏ.ஜி.ஏ.ஒப்பிஸுக்கு சனங்கள் போயிருக்கு.
அங்க போன சனத்துக்கு 'நாங்கள் ஏ.ஜி.ஏ. ஒப்பீஸுக்கு வந்திருக்கிறோமோ?இல்லாட்டி பாதை மாறி ஏதும் கலியாண மண்டபத்துக்கு வந்திட்டமோ?'எண்டு ஒரே டவுட். ஏனெண்டால், அங்க நிண்டவை எல்லாரும் கலியாணவீட்டில நிக்கிறமாதிரி பட்டுச் சீலை கட்டி, மேக்கப் கிறீம் எல்லாம் அள்ளியப்பிக் கொண்டு, நகை நட்டுகளை அடுக்கிக்கொண்டு நிண்டிருக்கினம். அவசரமா 'பேர்த் சேர்ட்டிபிக்கெட்’(பிறப்புச் சான்றிதழ்) எடுக்கப்போனவையிட்ட 'இண்டைக்கு இஞ்ச எடுக்கக் கஷ்டம். வேணுமெண்டால் அடுத்த ஏ.ஜி.ஏ ஒப்பீஸில போய் எடுங்கோ.
இப்ப எல்லாம் ஒன்லைன் தானே. எங்கையும் எடுக்கலாம் எண்டு சொல்லிப் போட்டு அவை ஒரு கலியாண வீட்டுக்குப் போற அலுவலிலையே கண்ணும்கருத்துமா இருந்திருக்கினம். அடுத்த பிரதேசத்து ஏ.ஜி.ஏ. ஒப்பீஸுக்கு போறதெண்டால் இன்னொரு பஸ் எடுக்கோணும். அப்பிடி எடுத்துப் போனாலும் அங்கையும் ஏதும் சாமத்தியவீடு. அந்தியேட்டி எண்டு அவையும் வெளிக்கிட்டா என்ன செய்யிறது எண்டு சனத்துக்கு யோசினை.
இப்பிடி யோசிச்சோ என்னவோ. அங்க போன அம்மா ஒராளுக்கு அவசரமா பாத்ரூம் போகவேண்டி வந்திட்டு. அவா அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு அந்த ஒப்பீஸில உள்ள பொதுவான பாத்ரூமுக்கு போனால், வாசலில திக்குப்பாலகர் மாதிரிரண்டு பொம்பிளையள் நிண்டு கொண்டு'அம்மா இஞ்சையெல்லாம் நீங்கள் போகக் கூடாது'எண்டு மறிச்சு திருப்பி அனுப்பிட்டினம். பாவம் அந்த அம்மா. தான் போன அவசரத்தோட சேர்ந்து வந்த 'ஆத்திரத்தையும்' அடக்கிக் கொண்டு வந்திட்டா. பிறகு பார்த்தால் அந்த பாத்ரூமுக்க தானாம் மேக்கப் நடந்திருக்கு. அதுக்க மேக்கப் போட்டு முடிச்சுக்கொண்டு சிலர் வந்திருக்கினம். அவை மேக்கப் போடுறதுக்காக சனங்கள் ஐம்புலனையும் அடக்க வேணுமாம். ஒப்பீஸில வேலை செய்யிற ஒராளுக்கு கலியாணம், கச்சேரி எண்டால் போகத் தான் வேணும். அதுக்குத்தானே அவைக்கு லஞ்ச் ரைம் இருக்கு. மத்தியானம் ஒரு மணித்தியாலம் எல்லாரும் போட்டு, திரும்பி வந்தால் ஒரு பிரச்சினையுமில்லையே. எல்லாம் மேய்க்கிறவையைச் சொல்லோணும், மேய்க்கிறவை ஒழுங்கா இருந்தால் மந்தைகள் தறிகெட்டுப் போகாது கண்டியளோ
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.