(புதியவன்)
பமுனுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியமல்வத்தவில் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சடலம் கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.