கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா வெள்ளி, ஞாயிறில ரியூசன்களுக்குப் போட்ட கட்டுப்பாடும் மாறிப்போட்டது. சட்டம் போட்டவர் பெஞ்சனில போனவுடன அதைப்பற்றி கவனிக்க ஆக்களில்லை எண்ட தைரியத்தில எல்லா ரியூட்டரியளும் இப்ப வெள்ளி, ஞாயிறிலையும் கிளாஸ் வைக்கத் தொடங்கிட்டினம். அதால பழையபடி பிள்ளையள் வீட்ட நிக்கவோ, அறநெறி வகுப்புகளுக்கு போகவோ, கிரவுண்டுக்குப் போய் விளையாடவோ நேரமில்லாமல், காலில சில்லைக் கட்டின மாதிரி ரியூசனுக்குப் பறந்து திரியதுகள். அதைவிட இந்த வெள்ளி, ஞாயிறில போட்ட தடையால இன்னொரு புதுப்பழக்கமும் சில ரியூசன்களில தொடங்கி, இன்னும் அது பரவிக்கொண்டிருக்குதாம். இரவிலயும் கிளாஸ் வைக்கிறது தான் அந்த வருத்தம்.
கிழமையில ரண்டுநாள் வகுப்பு வைக்க ஏலாது எண்டவுடன, இந்த ரியூட்டரிக்காரர் கண்டு பிடிச்ச வழிதான். இரவுநேர வகுப்பு. வெள்ளி, ஞாயிறில வைக்கவேண்டிய கிளாஸுகளை மற்ற நாளுகளில பின்னேரத்துக்கு பிறகு வைச்சு 'கவர்' பண்ணினவை. 'சிலபஸை முடிக்க எங்களுக்கு வேற வழியில்லை எண்டு ரியூசன்காரர் சொன்னதுக்கு பெற்றோரும் தலையாட்டினதால, பிள்ளையளை இரவு எட்டு, ஒன்பது மணி மட்டும் வைச்சுப் படிப்பிச்சுப் போட்டுத்தான் விட் டவை. இதால சிலபஸைக் 'கவர்' பண்ணிச் சினமோ இல்லையோ, தங்கட வருமானம் கெட்டுப் போகாமல் ரியூட்டரிக்காரர் 'கவர்' பண்ணிப் போட்டினம். அதோட கொலஷிப், ஏ.எஸ், ஓ.எல் எண்டு எக்ஸாமுகள் நெருங்க நெருங்க இந்த இரவுக் கிளாஸ் நடக்கிற நேரமும் கூடிக்கொண்டே போட்டுது. பிள்ளையளை வகுப்புக்கு அனுப்பிப் போட்டு, பெற்றார் றோட்டு வழியில ஏமம் சாமமா வெயிட் பண்ணி, பிறகு கிளாஸ் முடிய ஏத்திக் கொண்டு போறதைப் பாக்கப் பாவமா இருக்கும். அதைவிட இப்பிடி எல்லாப் பெற்றாரும் வந்து பிள்ளையளை ஏத்தி இறக்க வசதி இருக்காது. அப்பிடியான பிள்ளையள் அந்த இரவிலையும் நடந்தோ, சைக்கிளிலையோ தனியத்தான் போகோணும்.
இப்ப திரும்ப வெள்ளி, ஞாயிறில கிளாஸு களை வைக்கத்தொடங்கினாலும், இரவுக்கிளாஸ் வைக்கிறதை ரியூட்டரியள் கைவிடேலை. அதால் இந்த மழைக்குள்ள, இருட்டுக்குள்ள பிள்ளையள் தனியப் போகுதுகள். அதிலயும் சில இடங்களில் பொம்பிளைப் பிள்ளையள் இப்பிடி தனியப் போறதைப் பாக்க, அந்த ரியூட்டரிக்காரரில ஆத்திரம் தான் வருகுது. ரவுண் ரியூட்டரியள் மட்டுமில்ல, உள்ளூர் ரியூட்டரியள் தான் இந்த 'நைட் கிளாஸ்'வைக்கிறதில மும்முரமா நிக்கினமாம். உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டையெண்ட நினைப்பில தங்களைக் கேள்வி கேக்க ஆருமில்லையெண்டு உவையள் செய்யிற இந்த வேலைக்கு ஆர் முற்றுப்புள்ளி வைப்பினம்?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.