[புதியவன்]
இந்தியன் பிரீமியன் லீக் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் கிண்ணத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கிய 17ஆவது இந்தியன் பிரீமியன் லீக் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்;ரேயஸ் ஐயர் தலைமையிலான துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் பலம்வாய்ந்த கொல்கத்தா அணியுடன் அதே பலத்துடன் கூடிய பட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி மோதுகிறது. இவர்களில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
இதனிடையே, நேற்று மாலை திடீரென பெய்த மழையால் கொல்கத்தா அணியின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.