[புதியவன்]
டெல்லியில் விவேக் விஹாரில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
விபத்து குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: “இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹாரில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது அருகிலிருந்த கட்டடத்துக்ககும் தீ பரவி இருந்தது. ஆனால், அதில் இருந்தோர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டது”.
முன்னதாக, நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்த சோகம் விலகுவதற்குள் டெல்லியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.