(புதியவன்)
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை , ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட,துடுப்பாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பொம்பதூரில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர் பொதுப்படம் மற்றும் மேஜர் காந்தரூபன் அவர்களின் திருவுருவப் படம் முன்பாக ஈகச்சுடரை வீரச்சாவடைந்த மேஜர் மலரவனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சம்மேளனப் பிரதிநிதிகள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் உறுப்பினர்கள் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
ஆறுக்கு மேற்பட்ட விளையாட்டுத்திடல்களில் சமநேரத்தில் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன. துடுப்பாட்ட இறுதிக்கட்ட போட்டிகள் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டன.
போட்டிகளின் நிறைவாக வெற்றிபெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.