இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7ஆம் திகதி நாளைய தினம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டிக்கான அணி வீரர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மைக்கேல் நேசர் சேர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அணி தெரிவித்துள்ளது. மிரட்டலான பந்துவீச்சாளரான ஹேசல்வுட் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எனினும் ஸ்டார்க், கம்மின்ஸ் உள்ளனர். ஆனால் ஆல் ரவுண்டரான நேசர் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டின் இடத்தை நிரப்புவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.