இந்த ஆண்டுடன் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது முடிவடைந்துள்ளது. நேற்று முடிவடைந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 பந்துகள் மீதமுள்ள நிலையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக டேவிட் வார்னர், இப்போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவேன் என்று கூறியிருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக அவரலால் இந்த டெஸ்ட போட்டியில் ஜொலிக்க முடியாமல் போனது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 9 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களும் மட்டுமே எடுத்தார். இருந்தாலும் இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் டேவிட் வார்னர் ஒரு புதிய சாதனையும் படைத்துள்ளார்.
அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷேவாக் 170 இன்னிங்ஸ்களில் விளையாடி 8207 ரன்கள் எடுத்து 5வது இடத்தில் இருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின் மூலம் டேவிட் வார்னர் 8208 ரன்கள் எடுத்து ஷேவாக்கை பின்னுக்குத் தள்ளிவிட்டு, 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். டேவிட் வார்னர் 188 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7z024p
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.