மொனராகலையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 68 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த ஆண்டு முதல் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் வேளைகளில் அவர்களின் வீட்டிற்குச் சென்று அடிக்கடி பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட
அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வன்புணர்விற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.