ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர். பிறேமதாஸ மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு இரு அணிகளும் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.
கொழும்பு ஆர். பிறேமதாஸ மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்லதொரு களமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை இரு அணிகளும் 155 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 94 போட்டிகளில் பாகிஸ்தானும், 58போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 1 போட்டி சமனாகவும் 4 போட்டிகள் எந்தவொரு முடிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ள அதேவேளை போட்டி ஏதேனும் ஒரு காரணத்தினால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தால் சராசரி புள்ளிகளுக்கு அமைய இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.