அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி கடந்த 16,17 மற்றும் 18ஆம் திகதிகளில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் வவு/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பிரிவு 17இல் 45 kg எடை பிரிவில் 95kg எடை தூக்கி 1ம் இடத்தையும், பிரிவு 17இல் 81kg எடை பிரிவில் 78kg எடை தூக்கி 2ம் இடத்தையும், பிரிவு 20இல் 87kg+ எடை பிரிவில் 97kg எடை தூக்கி 4ம் இடத்தையும் பெற்றதோடு, வவு/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் மாணவிகள் பங்குபற்றினர்.
பிரிவு 20 இல் 55kg எடை பிரிவில் 77kg எடை தூக்கி 3ம் இடத்தையும் பிரிவு 20 இல் 49kg எடை பிரிவில் 65kg எடை தூக்கி 6ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.