இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை பெறுவதாக ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.42 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானின் ஒருநாள் போட்டிகளிலும் ஆசிய கிண்ணத்தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் நவீன் உல் ஹக் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் சர்வதேச போட்டிகளைத் தவிர இந்தியன் பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக், பிக் பேஷ் லீக் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் உள்ளிட்ட இருபதுக்கு 20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.