பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த சீஸனின் முதல் வாரத்தில் பிரதீப் ஆண்டனி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகின்றது.
இந்த வாரம் நாமினேஷனில் இருந்த பிரதீப் முதல் ஆளாக காப்பாற்றப்பட்டுள்ளார். அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவு இருக்கின்றது. மாயா அடிக்கடி பிரதீப்பிடம் மோதி வருகின்றார். மேலும் மற்றவர்களை பற்றி புறம் பேசியும் வருகின்றார் மாயா. இதனால் கடுப்பான ரசிகர்கள் மாயாவை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.
குறிப்பாக பிரதீப்பிற்கு ரசிகர்கள் கைதட்ட மாட்டார்கள் என பேசினார் மாயா. ஆனால் பிரதீப் முதலில் காப்பாற்றப்பட்டார் என கமல் சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினர். இதையடுத்து கமல் ரசிகர்களை பார்த்து, என்னங்க நீங்க இப்படி பண்ணீட்டிங்க. மாயா பார்த்தா என்ன ஆகிறது. பிரதீப்பிற்கு மட்டும் கைதட்டுனா அவ்வளவு தான் என மாயா சபதம் போட்டுருக்காங்க. இப்டி நீங்க கைதட்டலாமா என மாயாவை பங்கமாக கலாய்த்தார் கமல்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.