இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்துள்ள லியோ படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இன்னும் சில நாட்கள் படம் வெளியாக இருக்கும் நிலையில், ஒரு பக்கம் ப்ரோமஷன் பணிகள் நடக்க, படத்தின் டிக்கெட் புக்கிங் மறுபக்கம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு ‘லியோ’ திரைப்படத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் இந்த வழக்கு என நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்து இருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.