நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த கடந்த சில படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கவான’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். விக்ரம் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். இதுதவிர நீண்ட நாட்களாக வெளியாகாத துருவ நட்சத்திரம்’ படமும் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதையடுத்து தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் விக்ரம் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.