பாகிஸ்தானில் மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது என்ன பற்றாக்குறை என்பதை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சடிக்கப்படுவதில்லை. லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடுதான் இதற்குக் காரணம். இந்தத் தகவலை பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு இது குறித்து மவுனம் காக்கிறது.
இதற்கிடையில், பெஷாவரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 3000 முதல் 4000 பாஸ்போர்ட்டுகளை வந்த நிலையில் தற்போது தினமும் 12 முதல் 13 பாஸ்போர்ட்களை மட்டுமே அச்சிட முடிகிறது. பாகிஸ்தானில் அச்சிடப்படாத பாஸ்போர்ட்டுகள் சுமார் 7 லட்சம் தேக்கிவைக்கப்பட்டுள்ளதாம்.
இருப்பினும், பாகிஸ்தானில் இதுபோன்ற நெருக்கடி ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டில், அச்சுப்பொறிகள் மற்றும் லேமினேஷன் பேப்பர்களின் பற்றாக்குறை காரணமாக பாஸ்போர்ட் அச்சிடுதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.