சீனாவிற்கு எதிராக நேபாளத்தின் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. டிக்டாக்கை தடை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.
நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டாக் தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் அடியாகும். ஏனெனில் நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிக்டோக்கில் 1,629 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பே இந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்- ஐ தடை செய்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக டிக்டாக்-ஐ தடை செய்யும் மூன்றாவது நாடாக நேபாளம் மாறியுள்ளது. இந்தியா 2021 ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தானில் 2022 ஆம் ஆண்டிலும் டிக்டாக்- ஐ தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.