ஆதவன்.
வடக்கில் உள்ள சில பள்ளிக்கூடங்களில இப்ப புதுசா ஒரு சிக்கல் வந்திருக்கு. கன பள்ளிக்கூடங்கள் இன்னமும் நிரந்தர அதிபர் இல்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கு. அதால கிட்டடியில எக்ஸாம் வைச்சு. வடக்கில முந்நூற்றுச் சொச்சம் பேருக்கு புதிசா அதிபர் நியமனம் குடுபட்டு, அவைக்கு இப்ப பயிற்சியளும் நடந்து கொண்டிருக்கு. அந்தப் பயிற்சி முடிய அவை புதுப் பள்ளிக்கூடங்களுக்குப் போகவேணும். ஆனால் அங்கதான் ஒரு சிக்கல் முளைச்சிருக்குது.
பள்ளிக்கூடத்தை சீரா நடத்தவேணுமெண்டால், அதிபர் கட்டாயம் தேவை. ஆனால் அதிபர் இல்லாத காலத்தில எப்பிடி பள்ளிக்கூடங்களைச் சரியா நடத்த ஏலும்? அதால அந்தந்தப் பள்ளிக்கூடத்தில இருக்கிற நிர்வாகத்திறமை இருக்கிறவையை 'கடமை நிறைவேற்று அதிபர்கள்' எண்ட வகையில நியமிச்சவை. இவைக்கு எக்ஸாம் ஒண்டும் வைக்கேலை.
எல்லாரும் ஆசிரியர்களா இருந்தவை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ மாதிரி நடக்காமல், ஒரு அதிபர் செய்யவேண்டியதுக்கு மேலால செய்த கடமை நிறைவேற்று அதிபர்மாரும் இருக்கினம். அதைமாதிரி, பள்ளிக்கூடங்களை சரியாக் கொண்டிழுக்க முடியாமல் சறுக்கின ஆக்களும் இருக்கத்தான் செய்யினம். இப்பிடியான நிலைமையில புதுசாஎக்ஸாமில எடுபட்ட ஆக்கள் அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு வந்தால், இப்ப நிறைவேற்று அதிபரா இருக்கிறவை திரும்பபடிப்பிக்கிற ஆசிரியரா போகவேணும். இவ்வளவு நாளும் அதிபரா இருந்திட்டு, திடீரெண்டு மறுபடியும் முதலில இருந்து எண்டமாதிரி, ஆசிரியரா போறதெண்டது மனரீதியா பாதிப்புத்தானே. அதால கடமை நிறைவேற்று அதிபர்கள் இருக்கிற பள்ளிக்கூடங்களுக்கு புதிசா அதிபர்மாரை நியமிக்க வேண்டாம்' எண்டு அவையள் மேல்மட்டங்களோட கதைக்சினமாம். இது அவையின்ர நியாயம்.
ஆனால் இதில இன்னொரு பக்க நியாயமும் இருக்கத்தான் செய்யுது. கடமை நிறைவேற்று அதிபர் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு புதுசா வந்தவையை அதிபராப் போடக்கூடாது எண்டால், அவையள் வெளிமாவட்டங்களுக்குத்தான் போகவேணும். "இப்பிடி எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்ணி, தகுதியை நிரூபிச்சு வந்த எங்களுக்கு வெளிமாவட்டம், ஆனால் எக்ஸாம் எடுக்காமல், அதிபர் இல்லாத இடத்துக்கு போடுப்பட்டவை இங்கயே இருக்கப் போகினம். அப்பிடிஅவைதான் தொடர்ந்தும் அந்தந்தப் பள்ளிக்கூடங் களில இருப்பினம் எண்டால், எதுக்கு எக்ஸாம் வைச்சு எங்களை எடுத்தவை?' எண்டு இவையள் கேக்கினம். ரண்டு பக்கமும் நியாயம் இருக்கு. அதால இந்த ரண்டு தரப்புக்கும் பாதிப்பு வராமல் ஒரு நல்ல முடிவை திணைக்களம் எடுக்கோணும். அப்பிடி எடுத்தாத்தான் எங்கட கல்வியின் எதிர்காலத்தை சரியாப் பாதுகாக்க முடியும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.