04 கடைகள் சுற்றிவளைப்பு
(புதியவன்)
புற்றுநோயை உண்டாக்கும், சருமத்துக்கு பொருத்தமற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்ட முகப்பூச்சுக்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று சோதனையிடப்பட்ட போது, அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான முகப்பூச்சுக்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் முகப்பூச்சு வகைகள் தரமற்றவை எனவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகள் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சோதனையின் மூலம் உலக சுகாதார நிறுவனத்தினால் தடைசெய்யப்பட்டமுகப்பூச்சுக்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.