(புதியவன்)
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார்.
இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது, அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சென்னை திரும்பிய அஜித், கடந்த 07ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை நிறைவுபெற்று மறுநாள் (08) மாலை வீடு திரும்பிய அஜித்துக்கு என்ன பிரச்சினை என அவரது ரசிகர்கள் குழம்ப, முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை, மூளையில் கட்டி என அவரது உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரவின.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே அவரது காதுக்குள் வண்டு ரீங்காரமிடுவதைப் போல் இரைச்சல் சப்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
சத்தம் அதிகமாக இருக்கும் துறைகளில் பணிபுரிவோருக்கும், ஹெட்போன் அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.(ப)
id8f60
rl5fuh
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.