இன்றைய ராசிபலன் (22 மார்ச் 2024)
இன்றைய ராசிபலன் (22 மார்ச் 2024)

மேஷம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்புவட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள் தாயுடன் வீண் விவாதம் வந்து போகும். நட்பு வட்டம் உருவாகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: இதுவரை இருந்த கூச்சல் குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வாகன பழுது நீக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத் துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அக்கம் – பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாக போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மறைத்து பாராட்டப்படுவீர்கள். சிறப்பு மிகுந்த நாள்.

மகரம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்: இதுவரை இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு நீங்கள் நல்லது சொல்லப் போய் உங்களுக்கே கெடுதலாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரி களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

239 2

2 Comments

* * * <a href="http://hairtransplantlebanon.com/upload/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=2aa026fcfd06df191878d4da7bb7977f* 26-Mar-2024

zsn1ca

* * * Apple iPhone 15 Free: http://hairtransplantlebanon.com/upload/go.php * * * hs=2aa026fcfd06df191878d4da7bb7977f* 26-Mar-2024

5cnglj

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.