மேடம்: இதுவரை இழுபறியாக இருந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். செலவுகளும் ஏற்படும். மகிழ்ச்சி உண்டாகும். உடல் அசதி உண்டாகும் மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.
இடபம்: தொடங்கும் காரியங்கள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களால் 1 சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வாக்குவாதம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.
மிதுனம்: சிலருக்கு எதிர்பாராத திடீர்ச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கடக மனதில் உற்சாகம் அதிகரித்துக் காணப்ப டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகச் செலவுசெய்யவேண்டிவரும். ஆதாயம் உண்டாகும். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும்.
சிம்மம்: பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. பெருமை உண்டாகும். முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.
கன்னி: சிலருக்கு தினிப் பணவரவுக்கும், திடீர்ச் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்சினைகள் நீங்கும்.
துலாம்:புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும்.
விருச்சிகம் : மகிழ்ச்சியான நாள். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது புதியமுயற்சிகளைத் தவிர்த்துவிடவும்.
தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.
கும்பம்: புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகள் வகையில் எச்சரிக் கையாக இருக்கவும். சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வைரவரை வழிபடுவது நன்று. மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்: எதிலும் பொறுமையுடன் செயற் படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை யும் ஏற்படும். அலைச்சல் உண்டாகும். சகோ தரர்களால் அனுகூலம் ஏற்படும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.