புதியவன்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ. பி. எல். அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடப்பு ஐ. பி. எல். தொடரில் விளையாடவுள்ளார்.
ஐ. பி. எல். வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் வனிந்து ஹசரங்கவை ஹைதராபாத் அணி விலைக்கு வாங்கியது. ஆனால், காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவருக்குப் பதிலாகவே சுழல் பந்துவீச்சாளர் வியாஸ்காந்தை ஹைதராபாத் அணி தெரிவு செய்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அந்த அணி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக, வியாஸ்காந்த் எல். பி.எல். தொடரில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஐ. பி. எல்.தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக பங்களிப்பு செய்திருந்தார். இந்த நிலையிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், மற்றொரு யாழ்ப்பாண வீரரான மாதுளன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.