உலகின் மிகப்பெரிய இரண்டாவது அக்ஷர்தாம் என்ற இந்துக் கோயில் ஒக்ரோபர் 8 ஆம் திகதி நியூயோர்க்கில் திறக்கப்படவுள்ளது.
இக்கோவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றது.
இந்த கோயில் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் இருந்து 60 மைல்கள் தெற்கேயும், வோஷிங்டன் நகருக்கு 180 மைல் வடக்கேயும் அமைந்துள்ளது.
கோயில் முழுவதும் 10 ஆயிரம் சிலைகள் மற்றும் இந்திய இசை கருவிகள் மற்றும் நடன வடிவங்கள் செதுக்கப்பட்டு இந்திய கலாசாரத்தின் வடிவமைப்பை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தின் போது நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட இரண்டு மில்லியன் கன அடிகல் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீரைக் கொண்டுள்ளது.
அக்ஷர்தாம் ஒக்டோபர் 8 ஆம் திகதி BAPS ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக திறக்கப்படும் எனவும் இது ஒக்டோபர் 18 முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.