அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் எனும் 46 வயதான நபர் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் 16 கோடி ரூபாய் செலவழித்து வருகின்றார் என்பதை உங்களால் நம்பமுடிகின்றதா?
3300 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான இவர் தன்னை இளமையாக காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக தினமும் 111 மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றார்.
மேலும் தனது இளம்கட்டிளமைப்பருவ மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலாஜன், ஸ்பெர்மிடின், கிரியேட்டின் போன்றவை அடங்கிய கிரீன் ஜெயன்ட் என்ற ஸ்மூத்தியை தினசரி உட்கொள்ளும் அவர், உடல் கொழுப்பு பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களுடன் தம்மை கண்காணித்துக் கொள்ள 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நியமித்துள்ளார்.
மேலும் அவரது சொகுசு காரை தனது உடல் அதிரக் கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.