'பிக் மட்ச்' எண்டாலே யாழ்ப்பாணப் பள்ளிக்கூடப் பெடியளுக்கு கொண்டாட்டம் தான். பற்றிக்ஸ் - ஜப்னா கொலிஜ், சென்ரல் - சென்.ஜோன்ஸ், யாழ். இந்து -கொழும்பு இந்து எண்டு இந்தமுறை மூண்டு பிக்மட்ச் நடந்து முடிஞ்சிருக்கு.
பள்ளிக்கூடக் கொடியை கழுத்தில போட்டபடி. 'ட்ரம் 'ஒண்டை அடிச்சு, தங்கட பள்ளிக்கூடத்தின்ர பெருமையைச் சொல்லுறமாதிரி பாட்டுகள், கோ- ஷங்கள் எண்டு றோட்டு முழுக்க ஊர்கோலம் போவினம், சந்தியன்,ரியூசன்கள் பள்ளிக்கூடங்கள் எண்டு இந்த 'பிக்மட்ச்' கச்சேரி களைகட்டும். பெண்பிரசுகள் வரேக்குள்ள இந்தப் பாட்டுச் சத்தம், கோஷம் எல்லாம் இன்னும் பெரிசாக் கேக்கும். இது இண்டைக்கு நேற்றைக்கு வந்த வழக்கமில்லை. காலங்காலமா இப்பிடித்தான் நடக்குது. இடைக்கிடை கடைக்காரரும் காசு. கீசு குடுப்பினம். அந்தக் காசில ஏதும் வாங்கிச் சாப் பிட்டிட்டு, 'பிக் மட்ச்' ஊர்கோலம் களைகட்டும். கிரவுண்டுக்க மட்ச் நடந்தாலும் யாழ்ப்பாணம் முழுக்க, அந்த மட்ச் நடக்கிறமாதிரி ஒரு உணர்வைக் கொண்டுவாறது இப்பிடியான 'பிக் மட்ச் கச்சேரியன்தான். ஆனால் எல்லாம் அளவோட இருக்கோணும். அளவுக்கு மிஞ்சினால் அஜின மோட்டோவும் நஞ்சு.
இந்தமுறையும் பிக்மட்ச்' கச்சேரி அறம்புறமா நடந்தது. ஆனால் வழக்கத்தைவிட இந்தமுறை 'ஏன் இப்பிடிச் செய்யிறாங்கள்' எண்டு சனமே முகத்தைச் சுழிக்கவைக்கிறமாதிரி சில சம்பவங் களும் நடக்காமல் இல்லை. ரியூசன்களுக்கு முன்னாலை இந்த 'பிக்மட்ச்' குரூப்காரர் நாலைஞ்சு 'ட்ரம்ஸை' கொண்டுபோய் அடிச்சு, பாட்டுப்படிச்சு பைலா ஆடினதால உள்ளுக்க படிப்பிக்கவே கஷ்டமா இருந்த தெண்டு ரியூசன் மாஸ்ரர்மார் குறைப்படுகினம். ஓ.எல்.எக்ஸாம் வரப்போற நிலையில இப்பிடி கிழமையில ஒருநாள் நடக்கிற கிளாஸையும் நடத்தவிடாமல் சிலர் ரியூசனுக்குள்ள புகுந்து பாட்டுப்படிச்சு பைலா ஆடின கதையளும் நடந்தி ருக்கு. அதோடறோட்டுக்கு நடுவில வைச்சு 'ட்ரம்ஸை' அடிச் சதால கிளாஸுக்குப் போன பிள்ளையளை ஏத்த வந்த சனமும், வழக்கமா அந்த றோட்டால ஓடியாடித்திரியிற ஆக்களும் ஆமியின்ர 'கொன்வே' மாதிரி கனநேரம் வெய்ட் பண்ணித் தான் போக வேண்டியிருந்ததாம்.
இதைவிட முக்கியமான சம்பவம், யாழ்ப்பாணம் நாவலர் றோட்டில நடந்ததாம். இந்த 'பிக் மட்ச்" பைலாக் கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில கொடி யையும் கட்டிக்கொண்டு ஹெல்மெட்டும் போடாமல் ஸ்பீட்டாப் போயிருக்கினம். அவை போற பக்கத்துக்கு எதிர்ப் பக்கமா இன்னொரு குடும்பம் பைக்கில வந்தி ருக்கு. ஹெல்மெட் இல்லாமல்போன பிக்மட்ச் காரர் தங்களுக்கு முன்னுக்குப் போய்க் கொண்டிருந்த ஓட்டோவை 'ஓவர் ரேக்' பண்ணிக்கொண்டு அங்கால போக நினைச்சு ஒரு வெட்டு வெட்டியிருக்கினம். அந்த வெட்டில எதிர்ப் பக்கமா வந்த மோட்டார் சைக்கிள் முட்டுப்பட்டு, அதில வந்தவை றோட்டிலையே குப்பிற விழுந்திட் டினம். அதுக்குப் பிறகாவது கீழ இறங்கி, அடிபட்டுக் கிடக்கிறவைக்கு என்ன நடந்தது எண்டு பார்த்து உதவிசெய்ய மனம்வராமல், 'பிக்மட்ச்' காரர் ஒண்டுமே நடக்காதமாதிரி அங்கால போயிருக்கினம். ஒழுக்கம்தான் இல்லை யெண்டால் உதவி செய்யிற குணமுமோ காணாமல் போட்டுது? ஏலுமட்டும் இந்த 'பிக்மட்ச்' கொண்டாட்ட கும்பலை ஒரு 'கொண்ட் ரோலுக்க வைச்சிருக்காட்டி, அது அடிதடிக் கும்பலாவும் மாறச் சான்ஸ் இருக்கு.
(18.03.2024 - உதயன் பத்திரிகை)
av7e2j
h1r15q
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.