புதியவன்
31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் (எஸ். ஆர். எச்.) அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் ஆகியோரின் அரைச்சதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் குவித்தது.
ஐதராபாத் தரப்பில் கிளாசன் 80, அபிஷேக் சர்மா 63, ஹெட் 62 ஓட்டங்களள் எடுத்தனர்.
இதையடுத்து 278 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் - இஷான் கிஷன் களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இதனால் 3 பந்துப்பரிமாற்றங்களில் மும்பை 50 ஓட்டங்களைக் கடந்தது.
அதிரடியாக விளையாடிய இஷான் 34 ஓட்டங்களிலும் ரோஹித் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நமன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 14 பந்தில் 30 ஓட்டங்கள் குவித்த நமன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்- டிம் டேவிட் முடிந்த அளவுக்கு வெற்றிக்குப் போராடினர். இறுதியில் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐ. பி. எல். தொடரில் மும்பை அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.