புதியவன்
பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இறுதிப் பந்துப்பரிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் தேவை. முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மயர் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. 3 ஆவது மற்றும் 5 ஆவது பந்தை ஆறு ஓட்டங்களுக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் சண்டிகரில் இன்று போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ஓட்டங்கள்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ஓட்டங்கள்), அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ஓட்டங்கள்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். ஜெய்ஸ்வால் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக விளையாடினார்.
அதேசமயம் ரபாடா அபாரமாக பந்து வீச ஆர். ஆர். அணியால் அதிரடியாக ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் சேர்த்தது. அந்த அணி 9 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் முதல் விக்கெட்டை இழந்தது.
கோட்டியன் 31 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அணித் தலைவர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 பந்துப்பரிமாற்றத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இறுதி 6 பந்துப்பரிமாற்றத்தில் 58 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16 ஆவது பந்துப்பரிமாற்றங்களில் முறையே 9 மற்றும் 6 ஓட்டங்கள் கிடைத்தது.
17 ஆவது பந்துப்பரிமாற்றத்தை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த பந்துப்பரிமாற்றத்தில் ரியான் பராக் 18 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.இருப்பினும், இந்த பந்துப்பரிமாற்றத்தில் 9 ஓட்டங்கள் கிடைத்தது.
இறுதி 3 பந்துப்பரிமாற்றங்களில் 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் ஜூரேல் 11 பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால், ராஜஸ்தான் அணி 17.2 பந்துப்பரிமாற்றத்தில் 115 ஓட்டங்கள் எடுத்து நெருக்கடிக்குள்ளானது.
16 பந்துகளில் 33 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஹெட்மயருடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார்.
இந்த பந்துப்பரிமாற்றத்தில் ஐந்தாவது பந்தை ஹெட்மயர் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டியதுடன், இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் விளாசினார். இதனால் 18 ஆவது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ஓட்டங்கள் கிடைத்தது.
இறுதி இரண்டு பந்துப்பரிமாற்றங்களில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 ஆவது பந்துப்பரிமாற்றத்தை சாம் கரன் வீசினார்.
இந்த பந்துப்பரிமாற்றத்தில் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இறுதி 3 பந்தில் இரண்டு ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆர். ஆர்.அணி, 19ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், இறுதிப்பந்துப்பரிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மயர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மயர் ஓட்டம் ஏதும் அடிக்கவில்லை. 3 ஆவது பந்தை ஆறு ஓட்டங்களுக்கு தூக்கி அடித்தார்.
இறுதி 3 பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4 ஆவது பந்தில் 2 ஓட்டம் எடுத்த ஹெட்மயர் 5 ஆவது பந்தை ஆறு ஓட்டத்துக்கு விரட்டினார். இதனால் ஆர். ஆர். 19.5 பந்துப்பரிமாற்றத்தில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.