வேலியில் போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டா அந்தரப்படத்தானே வேணும். அப்பிடியொரு நிலைமை கிளிநொச்சியில இருக்கிற பள்ளிக்கூட மொண்டுக்கு நடந்திருக்கு. இத்தனைக்கும் அந்தப் பள்ளிக்கூடம் ரவுணுக்குள்ள இல்லை. ஒரு கிராமத்தில தான் இருக்குது. கிராமத்தில இருந்தாலும் அந்தப் பள்ளிக்கூடம் தேசிய அளவில கபடிக்கு பேமஸ். அந்தப்பள்ளிக்கூடத்து கபடி மகளிர் அணி, தொடர்ச்சியா பத்து வருசமா தேசியமட்டக் கபடிப் போட்டியில் கிண்ணம் வெல்லாமல் வந்ததேயில்லை. பிள்ளையளும், பள்ளிக்கூட நிர்வாகமும் நேரகாலம், வெயில்-மழை பார்க்காமல் கஷ்டப்பட்டதால. கபடி போட்டியெண்டாலே கண்ணை மூடிக்கொண்டு கிண்ணம் வெல்லுற அளவுக்கு முன்னேறியிருக்கினம்.
இப்பிடிப்பட்ட அந்தப் பள்ளிக்கூடந்தில திட்டடியில, விளையாட்டுப்போட்டி நடந்தது. அதுக்கு விருந்தினரா கல்வித்திணைக்களத்தில இருக்கிற ஒரு அதிகாரியை கூப்பிட்டிருக்கினம். அந்த அதிகாரிக்கு வாயில சனி, எங்கபோணாலும் ஏதும் எக்குத்தப்பா கதைக்காமல் அவர் வந்ததில்லை. அதால பிரச்சினையளுக்கும் அவருக்கும் கடும் நல்லுறவு. இப்பிடிப்பட்ட அதிகாரியை விருந்தினராக் கூப்பிட்ட பலனை அண்டைக்கு அந்தப் பள்ளிக்கூடக்காரர் அனுபவிச்சிருக்கினம்.
விளையாட்டில் நேர்மை முக்கியம் ஆனால் இந்தப் பள்ளிக்கூடத்தில இருந்து கபடிப் போட்டிக்கு அக்காவுக்குப் பதிலாத் தங்கச்சியும். தங்கச்சிக்குப்பதிலா அக்காவும் ஆள்மாறாட்டம் செய்து விளையாடின வரலாறு இருக்கு. அதால் இனிமேலாவது விளையாட்டில் நேர்மையா இருக்கப் பழகோணும் எண்டு அந்தாள் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டியிருக்குது. இதைக் கேட்டு,சுபடி ரீமில இருக்கிற பிள்ளையளுக்கும். அவையின்ர பெற்றோருக்கும் கடுப்பேறிட்டுது. அந்தப் பிள்ளையள் கஷ்டப்பட்டு தேசியத்துக்குப் போய் உயிரைக் குடுத்து விளையாடி வெண்டதை, அந்நாள் 'ஆள்மாறாட்டம் செய்துதான் வெண்டனீங்கள் எண்டு கேவலப்படுத்தினால் ஆத்திரம் வரத்தானே செய்யும், அதோட கோட்ட மட்டப் போட்டியளிலையே ஒவ்வொரு அணியிலையும் உள்ளவையின்ர ஆளடையாளத்தை வடிவா 'செக்'பண்ணித்தான் விளையாடவிடுறவை. அப்பிடியிருக்க தேசிய மட்டப் போட்டியில இப்பிடி ஆள்மாறாட்டம் செய்ய ஏலுமோ? நல்லதைப் பாராட்ட மண சில்லாட்டியும் அதை குறைசொல்லாமல் இருக்கிறது கூட ஒருவகையில உத்தமம் தான். இப்பு அந்த அதிகாரிக்கு எதிரா பள்ளிக்கூட பழையமாணவர்கள் மேலிடத்துக்கு அறி விச்சிருக்கினமாம். ஆளுக்கு மேலிடம் கூப்பிட்டு மன்னிப்புக் கேக்கவைச்சு, வாய்க்கு பிளாஸ்ரரும் போடப்போகுது எண்டு சொல்லுகினம். பாப்பம் என்ன நடக்குதெண்டு.
(26.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.