பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது
அடுத்த ஆண்டு (2024) பொங்கலை முன்னிட்டு சில தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், அந்த லிஸ்டில் புதியதாக ஒரு திரைப்படம் இணைந்துள்ளது. அது வேற யாரும் இல்லை. தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை வில்லனாக ஒரு கலக்கு கலக்கி வரும் நம்ம விஜய் சேதுபதி திரைப்படம் தான்.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகையை பல படங்கள் குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சியான் விக்ரமின் தங்கலான், நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால்சலாம் திரைப்படம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன அரண்மனை படத்தின் 4ம் பாகமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.