புதியவன்
5 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் பெப்ரவரி 15 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியது.
மார்ச் 15 ஆம் திகதி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. மக்களால் மிகவும் இரசிக்கப்பட்டது. பெருமளவு இளைஞர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில், உலகளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் வசூலை முறியடித்து மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பிரேமலு திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.