ஆதவன்
மேடம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.
இடபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
மிதுனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்று உங்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வரக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவுதரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம்
துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன் னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட் டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.
விருச்சிகம் : ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்பு கூடும் நாள்.
தனுசு: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயற்படு வார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால்பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். முக்கியமான கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்துநீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
மீனம்: சமயோசிதமாகவும், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.