[புதியவன்]
2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விடயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டிலிட் செய்யப்பட்ட அப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் TRG Datacenter வெளியிட்டுள்ள பட்டியலின் படி இந்த ஆண்டு அதிகம் டிலிட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது’ என 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேடி உள்ளனர்.
எனவே, இந்த ஆண்டு அதிகம் டிலிட் செய்யபட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் சினாப்சட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளது.
2023ல் அதிகம் டிலிட் செய்யப்பட்ட செயலிகள்
இன்ஸ்டாகிராம் – 10,20,000
சினாப்சட் – 1,28,500
டெலிகிராம் -71,700
பேஸ்புக் -24,900
ட்விட்டர்- 12,300
யூடியூப் 12,500
வாட்ஸ்அப் 4,950
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராமை 2 பில்லியனுக்கும் மேல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சூழலில், ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் மக்கள் இந்த செயலியை நீக்குவதை தேடி பார்த்து இன்ஸ்டாகிராமை நீங்கினால் எதிர்காலத்தில் இன்ஸ்டாகிராமுக்கு பெரிய அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதைப்போலவே அறிக்கையின் படி, சமூக வலைதளங்களை உலகம் முழுவதும் 480 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள் எனவும், அதில் தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் தங்களுடைய நேரத்தை செலவிடுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.